மாசிக்களரி விழா; பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
ADDED :318 days ago
முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் அருகே சோனைப்பிரியான் கோட்டை கிராமத்தில் அய்யனார் கோயில் 12ம் ஆண்டு மாசிக்களரி விழா நடந்தது. இதனை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு மேல் பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். அய்யனார், வாழவந்தாள், கைலாசநாதர், சூந்தாள மூர்த்தி, வீரமாகாளியம்மன், பேச்சியம்மனுக்கு நான்கு கால பூஜைகள் நடந்தது. பேச்சியம்மன் கோயிலில் இருந்து காப்பு கட்டிய பக்கர்கள் பால்குடம், அக்னி சட்டி, கரகம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வீரமாகாளியம்மன் கோயிலுக்கு வந்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின் மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவில் முதுகுளத்தூர், மதுரை, திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.