உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் பந்தல் கால் நடும் விழா

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் பந்தல் கால் நடும் விழா

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் வரும் 6ம் தேதி மாசி மக உற்சவம், கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதற்கான பந்தல் கால் நடும் விழா நேற்று காலை நடந்தது. முன்னதாக மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து கோவில் வாசலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பந்தல் கால் நடப்பட்டது. இதில் புவனகிரி சரக அறநிலையத்துறை ஆய்வாளர் சுபாஷினி, செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் முன்னாள் அறங்காவலர் குழுவினர் கலந்துகொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !