மாசி மூன்றாவது சோமவாரம்; அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம்
கோவை; கோவை சிங்காநல்லூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திங்கட்கிழமைகள் (சோம வாரம்) சிவ வழிபாடு செய்ய நல்ல நாள். நவக்கிரகங்களில் சந்திரன் ‘மனோகாரகன் ஆவார். இவரே மனிதர்களின் மனதில் எழும் எண்ணங்களை நிர்ணயிப்பவராக இருக்கிறார். குழப்பமான அல்லது தெளிவான முடிவெடுப்பதற்கு காரணகர்த்தா இவரே. இந்த சந்திரனை, சிவபெருமான் தலையில் சூடியுள்ளார். சந்திரனுக்கு ‘சோமன் என்ற பெயரும் உண்டு. இதனால் சிவனுக்கு ‘சோமசுந்தரர் ‘சோமசேகரன் ‘பிறை நுதலான் என்ற பெயர்களும் உண்டு. எனவே, மனக் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்க திங்கள்கிழமைகளில் சிவவழிபாடு செய்வது சிறப்பு பெறுகிறது. அதன்படி இன்று அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.