காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவ சிறப்பு அபிஷேகம்
ADDED :296 days ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 11-வது நாளில் வசந்தோத்சவம் சிறப்பாகக் நடைபெற்றது. முன்னதாக புதுமணத் தம்பதியர்களின் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீ காளஹஸ்திஷ்வரர் மற்றும் ஞானபிரசுனாம்பா தேவிக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தபட்டன. பின்னர், சூரிய புஷ்கரிணியில் திரிசூலத்திற்கு ஆகம முறைப்படி அபிஷேகம் செய்யப்பட்டது. திரிசூல அபிஷேகத்திற்குப் பிறகு, சுவாமி அம்மையார்களை பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தும் தீப, தூபங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சுவாமி அம்மையார்களின் அலங்காரம், அபிஷேகங்களையும் கண்டு பக்திப் பரவசம் அடைந்தனர்.