காஞ்சி குமரகோட்டத்தில் கிருத்திகை சிறப்பு நிகழ்ச்சி
ADDED :249 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டத்தில், மாசி மாத கிருத்திகையையொட்டி மூலவர் சுப்பரமணிய சுவாமிக்கும், உற்சவர் மண்டபத்தில் முத்துகுமார சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட கோவில் வழிபாட்டு குழு சார்பில், 352வது கிருத்திகை சிறப்பு நிகழ்ச்சி கோவில் கலையரங்க மண்டபத்தில் நடந்தது. இதில், கச்சபேஸ்வரர் கோவில் ஓதுவார் தமிழ்செல்வன் திருப்புகழ் தேனமுதுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். செங்குந்த படையோன் செஞ்சொல் அரங்கத்தில், ‘தட்ச காண்டம்’, ‘திருமுருகப்பெருமான் அருள்பெற்ற அடியார்கள்’ என்ற தலைப்பில், சிவ வேளியப்பன், ராஜேந்திரன் ஆகியோர் சொற்பொழிவாற்றினர். குமரகோட்டம் தலைமை அர்ச்சகர் காமேஸ்வர சிவாச்சாரியார் நிகழ்ச்சியை வழி நடத்தினார்.