உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆள்மேல் பல்லாக்கு வாகனத்தில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் வீதி உலா

ஆள்மேல் பல்லாக்கு வாகனத்தில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் வீதி உலா

காஞ்சிபுரம்; காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவத்தின் முக்கிய உற்சவமாக ஆள்மேல் பல்லாக்கு வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.


சக்தி பீட தலங்களில் ஓட்டியாண பீடமாக விளங்கும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாதம் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ உற்சவத்தை ஒட்டி நடைபெற்ற 9ம் நாள் காலை உற்சவத்தில் ஆரஞ்ச் நிறபட்டு உடுத்தி, திருவாபரணங்கள் அணிந்து,  மனோரஞ்சிதப்பூ, செண்பகப் பூ, மலர் மாலைகள், சூடி, காஞ்சி காமாட்சியம்மன் ஆள்மேல் பல்லாக்கு வாகனத்தில்  எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் மேள தாளங்கள்,பேண்டு வாத்தியங்கள் முழங்க, ஆல்மேல் பல்லாக்கு வாகனத்தில் ஓய்யாரமாக  நடை நடந்து காஞ்சிபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகளில் காஞ்சி காமாட்சி அம்மன் வலம் வந்தார். ராஜ வீதிகளில் ஆள்மேல் பல்லாக்கு வாகனத்தில்  வலம் வந்த காமாட்சி அம்மனை வழியெங்கும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !