/
கோயில்கள் செய்திகள் / மாசி கடைசி செவ்வாய்; பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
மாசி கடைசி செவ்வாய்; பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :581 days ago
கோவை; பெரியநாயக்கன்பாளையம் -குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மாசி மாதம் கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. விழாவில் விபூதி காப்பு அலங்காரத்துடன் சர்வ புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.