உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவிலில் தெப்ப உத்சவம்

பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவிலில் தெப்ப உத்சவம்

சிங்கபெருமாள் கோவில்; சிங்கபெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில், பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் குளமான சுத்த புஷ்கரணி குளத்தில், இந்தாண்டு தெப்ப உற்சவம் நடந்தது. நேற்று மாலை, உத்சவர் பிரகலாதவரதர், முரளி கண்ணன் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு மேல் மாட வீதிகளில் மங்கள இசை முழங்க வீதியுலா விமரிசையாக நடைபெற்றது. இன்று மாலை இரண்டாம் நாள் உற்சவம் நடைபெற உள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !