உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் தெப்போற்சவம்; ஸ்ரீதேவி பூதேவியுடன் தெப்பத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமி

திருப்பதியில் தெப்போற்சவம்; ஸ்ரீதேவி பூதேவியுடன் தெப்பத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமி

திருப்பதி;  திருமலையில் ஏழுமலையான் தெப்போற்சவத்தின் 4ம் நாளான நேற்று மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். பவுர்ணமியிடன் நிறைவு பெறும் தெப்போற்சவத்தில் நேற்று மாலை ஏழுமலையான் கோயில் கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி திருமலையில் உள்ள திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் ஐந்து சுற்றுகள் வலம் வந்து அருள்பாலித்தார். விழாவில், திருமலை பெரிய ஜீயா், சின்ன ஜீயா், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !