கைலாசநாதர் கோவிலில் டிச.10ல் சங்காபிஷேகம்!
ADDED :4688 days ago
ராசிபுரம்: ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில், வரும், 10ம் தேதி, 108 வலம்புரி சங்காபிஷேகம் நடக்க உள்ளது.ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், வரும், 9ம் தேதி, கைலாசநாதர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷே, ஆராதனை நடக்க உள்ளது. அதையடுத்து, மறுநாள், 10ம் தேதி காலை, கணபதி பூஜை, புன்ய ஆவாஹனம், பஞ்சகவ்ய பூஜை, சண்முக கலச அபிஷேகம் நடத்தப்பட்டு, கைலாசநாதருக்கு, 108 வலம்புரி சங்காபிஷேகம் நடத்தப்பட உள்ளது.பின், ஸ்வாமி திருத்தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். கருமாபுரம் சுந்தர சுப்பிரமணிய சிவாச்சாரியார், உமா பதி சிவம், தட்சிணாமூர்த்தி சிவம் ஆகியோர் பூஜையை நடத்துகின்றனர்.