கள்ளக்குறிச்சி கோவில்களில் மாசி மகம் சிறப்பு உற்சவம்
ADDED :223 days ago
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பெருமாள், சிவன் கோவில்களில் மாசி மகம் சிறப்பு உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, ஆகியவற்றுக்குப்பின் தேவி, பூதேவி, பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பூஜைகளை தேசிக பட்டர் செய்து வைத்தார். கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனமர் சிதம்பரேஸ்வரர் கோவிலில் அதிகாலை காலசந்தி பூஜைகளுக்குப்பின், மூலஸ்தான மூர்த்திகளுக்கு 16 வகை மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து உலக நலனுக்காக மகாசங்கல்பம் செய்து வைக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பித்தனர். பூஜைகளை சங்கரசிவம் குருக்கள் தலைமையிலான குழுவினர் செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.