சத்திய நாராயணன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :544 days ago
கோவை; கோவை ரேஸ்கோர்ஸ் நிர்மலா மகளிர் கல்லூரி எதிரே அமைந்திருக்கும் ஸ்ரீ சத்திய நாராயணன் கோவிலில் மாசி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சத்திய நாராயண சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்தனர்.