வத்திராயிருப்பு பகுதி சிவாலயங்களில் அஷ்டமி வழிபாடு!
ADDED :4784 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதி சிவாலயங்களில், மகாதேவஷ்டமி பூஜைகள் நடந்தன. காசிவிஸ்வநாதர் கோயிலில் சுவாமி, விசாலாட்சியம்மன், காலபைரவருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. கும்பம் வைத்து பூஜைகள் செய்து, கும்பநீரால் பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மூவரைவென்றான் மரகதவல்லி சமேத மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் சுவாமி, அம்பாளுக்குசிறப்பு பூஜைகள் நடந்தபின், பைரவருக்கு திருமஞ்சனம் நடந்தது. * சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கசுவாமி, சந்தனமகாலிங்கசுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமி கோயில்களில், மூலவர்களுக்கு 18 வகை அபிஷேகங்கள், வில்வ அர்ச்சனை வழிபாடுடன், சங்கொலித்து பூஜைகளும் நடந்தன.