உள்ளதை சொல்லுங்க!
ADDED :211 days ago
உண்மை பேச வேண்டும் என சொல்லாத மகான்களே இல்லை. உண்மையோ, பொய்யோ எதுவானாலும் பேசுவது வாய் தானே! உண்மையை மட்டும் வாயால் பேச வேண்டும் என்பதற்காக உண்மைக்கு ‘வாய் மை’ எனப் பெயர் சூட்டினர் நம் முன்னோர். இதே போல, உள்ளதைப் பேச வேண்டும் என்பதால் எண்ணத்தின் பிறப்பிடமான மனதை ‘உள்ளம்’ என்றனர். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் உள்ளத்தை சொல்லி, நல்லதையே செய்வார்கள்.