பங்குனி இரண்டாவது சோமவாரம்; வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :534 days ago
கோவை; கோவை நேரு ஸ்டேடியம் ஆடிஸ் வீதி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் இரண்டாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.