ஓங்கார ஆசிரமம் மகா கைலாயத்தில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா
ADDED :202 days ago
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ஓங்கார ஆசிரமம் மகா கைலாயத்தில், மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது. அதையொட்டி, விநாயகர், அஷ்டலஷ்மிகள், தசமகாவித்யா தேவி உட்பட 37 கோவில்களில், சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. அதைதொடர்ந்து, சுவாமி ஓங்காரநந்தா தலைமையில், சிறப்பு ஹோமம் நடந்தது. விழாவில் சுவாமி கோடீஸ்வரானந்தா, ஞானேஸ்வரி, கல்யாணி குருமூர்த்தி, கருணாகரன், ஷோபனா பத்மேஸ்வரி, சுப்ரமணியன், அருந்ததி, நீதிகுமார், உலகேஸ்வரி, ராஜமாதா ஸ்ரீ பிரேமலதா தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.