கமுதி காளியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகத்தில் 108 சங்காபிஷேகம்
ADDED :200 days ago
கமுதி; கமுதி காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் கடந்த நிலையில் மண்டலாபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து கோயில் முன்பு அமைக்கப்பட்ட யாகசால முன்பு சிவாச்சாரியார் தலைமையில் 108 சங்காபிஷேகம் பூஜை நடந்தது. பின் யாகசால பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை பூர்ணாஹீதி, தீபாராதனை நடந்தது. காளியம்மனுக்கு கும்ப நீர், பால், தயிர், சந்தனம், இளநீர் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அருந்ததியர் உறவின் முறையினர் செய்தனர்.