பங்குனி ஏகாதசி; வேணுகோபால சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை
ADDED :246 days ago
கோவை; கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே அமைந்துள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ குரு பவனபுரி ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் பங்குனி மாதம் ஏகாதசி விரதத்தை முன்னிட்டு மூலவருக்கு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஜோதி சொரூபமாய் சிறப்பு அலங்காரத்தில் பாமா ருக்மணி சமேதரராக வேணுகோபால சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.