பழநி, கிரிவீதியில் உள்ள விநாயகர் கோயில்களில் வருடாபிஷேகம்
ADDED :196 days ago
பழநி; பழநி, கிரிவீதியில் உள்ள விநாயகர் கோயில்களில் வருடாபிஷேகம் நடைபெற்றது. பழநி கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அடிவாரம் சரவணப் பொய்கை விநாயகர் கோயில், மேற்கு கிரி வீதி தலைவலி தீர்க்கும் விநாயகர் கோயில், நின்ற விநாயகர் கோயில், ராக்காலமட விநாயகர்கோயில், ரோப்கார் நிலையத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் கலசங்கள் வைத்து வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஐந்து விநாயகர்கள் கோயில்களில் வருடாபிஷேகம் நடைபெற்றது.