திருமூர்த்திமலை கோவிலில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கல்
ADDED :245 days ago
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் பணி துவங்கியது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு உரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுப்பிரகாரத்தில், தென்னை நார் மேட் விரிக்கப்பட்டு, நீர் விடப்பட்டு வருகிறது. மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நேற்று முதல் நீர் மோர் வழங்கப்படுகிறது. இதனை, அறங்காவலர் குழு தலைவர் ரவி, செயல் அலுவலர் அமர நாதன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.