வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் நீர் வளம் பெருக சிறப்பு பூஜை
ADDED :194 days ago
உடுமலை; சின்னவாளவாடி ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில், நீர்வளம் பெருக வருண ஜபம் மற்றும் கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. உடுமலை அருகே சின்னவாளவாடியில், ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. கோவிலில், நீர் வளம் பெருகவும், விவசாயம், தொழில் வளம் சிறக்கவும் வருண ஜபம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து, 108 கலசாபிேஷகம் மற்றும் ேஹாமம் நடந்தது. ேஹாமத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.