மேலும் செய்திகள்
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சடையாண்டி கோயில் திருவிழா
188 days ago
கோவை ஈஷா லிங்க பைரவி வளாகத்தில் வித்யாரம்பம்
188 days ago
மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத் தேர் வீதியுலா
188 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில், கோதண்டராமர் பஜனை கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், 13 நாட்கள் நடைபெறும் ராமநவமி உத்சவம் நேற்று துவங்கியது. விழாவையொட்டி தினமும், இரவு 7:00 மணிக்கு சொற்பொழிவு நடைபெறுகிறது. அதன்படி, முதல் நாளான நேற்று, ராமாவதார வைபவம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. இன்று, இரவு 7:00 மணிக்கு கீதா கல்யாணம், நாளை காகுத்தனும், குகப்பெருமானும், வரும் 30ல், பாதுகையும் பரதாழ்வானும், 31ல் ஜடாயு மோட்சமும், சபரி பக்தியும், ஏப்., 1ல் வாலிமோட்சமும், சுக்ரீவ பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. ஏப்.,2ல் சிறிய திருவடி கடல்தாவு படலம், ஏப்.,3ல் திருவடி தொழுத படலம், ஏப்., 4ல்விபீடண சரணாகதியும், முடிசூடலும், ஏப்., 5ல் ராமர் பட்டாபிஷேகம் ஆகிய தலைப்புகளில்,ஆன்மிக சொற்பொழிவாளர்களான கலைச் செல்வி, விஜயா ராகவன், பிரமிளகுமாரி, தெய்வ சிகாமணி, பத்மாவதி ஆகியோர் சொற் பொழி வாற்றுகின்றனர். ஏப்., 6ம் தேதி, காலை, ராமநவமி ஏகதினலட்சார்ச்சனையும், மாலை சீதா ராமர் திருக்கல்யாண உத்சவமும், இரவு அனுமந்த வாகனத்தில் புறப்பாடும் நடக்கிறது. ஏப்., 7ம் தேதி, காலை 6:00 மணிக்குகோபூஜையும், இரவு 7:00 மணிக்கு அனுமனின் அற்புதங்கள் என்ற தலைப்பில் சொற்பொழிவும், 8ம் தேதி, மாலை 6:30 மணிக்கு ஊஞ்சல் சேவைஉத்சவமும் நடக்கிறது.
188 days ago
188 days ago
188 days ago