காட்டூர் விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு
ADDED :291 days ago
கோவை; காட்டூர் விநாயகர் - சுப்பிரமணியர் - மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 11ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதையடுத்து பூச்சாட்டு நிகழ்வு, திருவிளக்கு வழிபாடு, அம்மன் அழைப்பு, கரகம், மாவிளக்கு பூஜை ஆகியன நடைபெற்றது. நிறைவாக இன்று 28ம் தேதி லட்சார்சனை நடைபெற்றது. மூத்தவர் அம்மன் மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதில் வேத பண்டிதர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.