சந்தன மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
ADDED :193 days ago
பரமக்குடி; பரமக்குடி சந்தன மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுடன் விழா துவங்கி நடக்கிறது. கோயிலில் மார்ச் 25 இரவு 9:30 மணிக்கு மேல் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் நேர்த்திக்கடன் செலுத்த விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டி தினமும் தரிசனம் செய்கின்றனர். ஏப்.,1 அன்று அக்னி சட்டி மற்றும் பொங்கல் வைபவம் நடக்க உள்ளது. ஏப்.,4 ல் காலை பால்குடம் தொடர்ந்து அன்னதானம் நடக்க உள்ளது.