பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
ADDED :193 days ago
பரமக்குடி; பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி பல்வேறு இடங்களில் பூத்தட்டுகளை வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் முன்னோட்டமாக நேற்று விழா நடந்தது. இதனை ஒட்டி நகரில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு வண்ண மலர்களை தட்டுகளில் நிரப்பி ஊர்வலமாக வந்தனர். பின்னர் பல்வேறு இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இரவு 9:00 மணி தொடங்கி மேளதாளம் முழங்க அனைத்து பூத்தட்டுகளும் ஊர்வலமாக கோயிலை அடைந்தது.