ராஜபாளையம் கோதண்ட ராமசுவாமி கோயிலில் கொடியேற்றம்
ADDED :194 days ago
ராஜபாளையம்; ராஜபாளையம் கோதண்ட ராமசுவாமி கோயில் பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் கொடிமரத்திற்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. ராமசுவாமி சீதாதேவி, பூதேவி அனுமன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஏப்.5ல் தேர் திருவிழா நடைபெறும். ஏற்பாடுகளை அறங்காவலர் சீனிவாச ராஜா தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.