பவுர்ணமி விரதம்; விளக்கேற்றி வழிபடுங்க.. வாழ்வு பிரகாசமாகும்..!
ADDED :192 days ago
பவுர்ணமி விரத வழிபாடு பல எண்ணற்ற பலன்களை தருகிறது. சந்திரன் வழிபாடு காலத்தை கடந்த பழமையானதாம். உள்ளம் ஆற்றலுடன் விளங்க சந்திரனின் அனுக்கிரகம் முக்கியம். பவுர்ணமி அன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பரிபூரணமாகப் பிரகாசிக்கும். பவுர்ணமியன்று சந்திரனின் அற்புத சக்தியை எளிதாய் அடையலாம். இன்று கிரிவலம் சென்று வழிபட மனஅழுத்தம் குறையும். நோய் நீங்கும். இன்று ஒருபொழுது மட்டும் உணவு உட்கொண்டு இஷ்ட தெய்வத்தைப் பூஜிக்க வேண்டும்; ஜபம், தியானம், பிரார்த்தனை போன்றவற்றில் ஆழ்ந்து ஈடுபடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். கேளிக்கைகளில் கலந்துகொள்ளக் கூடாது. துதிப்பாடல், பஜனை, பாராயணம், சத்சங்கம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். சிவசக்தியால் ஒளிரும் சந்திரனை கிரிவலம் வந்து வணங்குவோம்.. நன்மை பெறுவோம்..!