திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்
ADDED :174 days ago
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலுார், உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி, காலை 8:00 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன், தேரடியை வந்தடைந்தார். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், வேதமந்திரம் முழங்க ஜீயர் ஸ்ரீதேகளீச ராமானுஜாச்சாரியார் தலைமையில், தேரோட்டம் துவங்கியது. ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என பக்தி பெருக்குடன், பக்தர்கள் மாடவீதி வழியாக தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். ஆங்காங்கே மண்டகப்படி நடந்தது. மாலை தேர் நிலையை அடைந்தது.