உத்தரகோசமங்கை கோயிலில் டிச.27ல் ஆருத்ரா தரிசனம்!
ADDED :4683 days ago
கீழக்கரை: ராமநாதபுரம் உத்தர கோசமங்கை மங்கள நாதசுவாமி கோயிலில், ஆருத்ரா தரிசன விழா, டிச., 19ல் துவங்குகிறது. டிச.,27 ல் நடராஜர் சந்தனக்காப்பு களைதல் நடக்கிறது. இங்கு, ஒற்றை பச்சை மரகத கல்லால் ஆன, சந்தனம் பூசிய நடராஜர் சிலை உள்ளது. டிச., 19ல் காப்பு கட்டுதலுடன், ஆருத்ரா தரிசன விழா துவங்குகிறது. டிச.,27 காலை 10.30க்கு நடராஜருக்கு சந்தனக்காப்பு களையப்பட்டு, காலை 11 மணிக்கு சந்தனாதிபதி தைலம் பூசப்படும். பின்னர் சந்தனம், பால், தயிர், மஞ்சள், வெண்ணெய் உள்ளிட்ட 32 வகையான மகா அபிஷேகம் நடைபெறும். இரவு 10 மணிக்கு மூலவருக்கு, ஆருத்ரா மகா அபிஷேகம் செய்யப்பட்ட பின், மீண்டும் சந்தனம் சாத்தப்படும்.