உத்திரமேரூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி சேவை உத்சவம்
ADDED :199 days ago
உத்திரமேரூர்; உத்திரமேரூர் தாலுகா, பெருநகர் பட்டுவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், சிவராத்திரி, மாசி மகம், சித்திரை மாத அதிகார நந்தி உத்சவம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை மாத அதிகார நந்தி உத்சவம், இன்று விமரிசையாக நடந்தது. அதில், நேற்று, அதிகாலை 3:30 மணிக்கு மூலவருக்கு நெய், பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, காலை 7:00 மணிக்கு, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனையும் நடந்தது. பின், காலை 8:00 மணிக்கு பிரம்மபுரீஸ்வரர் அதிகார நந்தி அலங்காரம் செய்யப்பட்டு, சிவகன வாத்தியங்கள் இசை முழங்க, உற்சவர் வீதியுலா வந்தார்.