ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் பந்தல் கால் நடும் விழா
ADDED :206 days ago
ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி சித்திரை திருவிழா தொடங்குவதையொட்டி பந்தல் கால் நடும் விழா நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் சித்திரை திருவிழா வரும் மே மாதம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10ம் தேதி தேர்த் திருவிழா நடக்கிறது. இதனை முன்னிட்டு கோவில் முன்புறம் பந்தல் கால் நடும் விழா நடந்தது. இதனையொட்டி மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அர்ச்சனை, அபிேஷகம் நடந்தது. பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன், செயல் அலுவலர் கருணாகரன், தி.மு.க., நகர செயலாளர் செல்வகுமார், விவசாய அணி கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக அணி முத்துராமலிங்கம், நகர வர்த்தக சங்க தலைவர் சிவானந்தம், பூவராகமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.