உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவோணம், தேய்பிறை அஷ்டமி; பெருமாள், சிவன் திருவடியை போற்றுவோம்!

திருவோணம், தேய்பிறை அஷ்டமி; பெருமாள், சிவன் திருவடியை போற்றுவோம்!

பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் நாள் இது. பெருமாள் மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் தரும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாம்.


தேய்பிறை அஷ்டமி கால பைரவரை வழிபட சிறந்த நாள் இந்த தேய்பிறை அஷ்டமி. பெரிய சிவாலயங்களில் காலபைரவர் சந்நிதி இருக்கும். இவரே சிவன்கோயில் காவல் தெய்வமாவார். சில ஊர்களில் தனிக் கோயிலும் உண்டு. தேய்பிறை அஷ்டமி மட்டுமல்ல, ஞாயிறு ராகு காலத்திலும் இவரை வழிபடுவது சிறப்பு.  வில்வம், செம்பருத்தி, தவிர்த்த மற்ற மலர்களை பைரவருக்கு பயன்படுத்தலாம். சம்பா சாதம், உளுத்தம்பருப்பு கலந்த தயிர்சாதம், அப்பம், மிளகுவடை ஆகியவை இவருக்குரிய நைவேத்யம். எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப் பிடிக்காமல் மனம் ஏங்கும். அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுத மொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். சிவன் கோயில்களில் இன்று நடராஜர் அபிஷேகம் தரிசித்தல் சிறப்பு. இன்று சிவன், பெருமாள், பைரவரை வழிபட நல்லதே நடக்கும்..!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !