ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :494 days ago
திருவாடானை திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சன்னதியில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருவாடானை சம்ஹார பைரவர் குழுவினர் செய்திருந்தனர்.