/
கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூர் கபாலீஸ்வரர் தேரோட்டம் கோலாகலம்; நமச்சிவாய கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் தேரோட்டம் கோலாகலம்; நமச்சிவாய கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
ADDED :197 days ago
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இவ்விழாவில் தினமும், மாடவீதிகளில் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை காண, சுற்று வட்டார பகுதி மக்கள் மட்டுமின்றி வெளியில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடை்பெற்றது. முன்னதாக சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். சிறப்பு வழிபாடுகளுக்கு பின் ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க மாடவீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. நமச்சிவாய கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.