திருக்கோஷ்டியூர் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
ADDED :227 days ago
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவில் பக்தர்கள் அம்மனுக்கு பூக்கள் சமர்ப்பித்து வழிபட்டனர். இக்கோயிலில் 33ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு திருக்கோஷ்டியூர் மேலத்தெருவார் இசை வேளாளர் மற்றும் இளைஞர் மன்றம் சார்பில் பக்தர்கள் பூத்தட்டுக்கள் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பல வகையான பூக்களை சமர்ப்பித்தனர். மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்து விபூதி காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. நகரின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் மரிக்கொழுந்து,பூக்களுடன் வந்து தொடர்ந்து பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. நிறைவாக அம்மனுக்கு ஏகமுக கற்பூர ஆராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.