கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் சக்தி கரகம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :272 days ago
கோவை; கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை விழா கடந்த 14ம் தேதிதொடங்கி நடந்து வருகிறது. இதில் பக்தர்கள் அக்னி சட்டி , சக்திகரகம் எடுக்கும் நிகழ்வானது புதன்கிழமையான இன்று நடைபெற்றது. காலை 6 மணி அளவில் கோவை கோனியம்மன் கோவில் வாசலில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக காட்டூர் வந்து கோவை நஞ்சப்பா ரோட்டில் ஊர்வலமாக பக்தர்கள், தங்கள் கைகளில் அக்னி சட்ட ஏந்தியும், தலையில் சக்தி கரகம் எடுத்தும் சாலையில் நடந்து வந்தனர். நிறைவாக கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை முடித்து மூலவர் தண்டு மாரியம்மன் வழிபட்டனர். இதில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிறைவாக பொதுமக்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.