மந்தை கருப்பணசாமி கோயில் சித்திரை திருவிழா; முளைப்பாரி ஊர்வலம்
ADDED :221 days ago
மேலூர்; கொடடாணிபட்டி மந்தை கருப்பணசாமி கோயில் சித்திரை மாத திருவிழா முன்னிட்டு ஏப். 15 முதல் பெண்கள் விரதம் இருந்து முளைப்பாரியை வளர்த்தனர். இன்று நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப்பெற்ற பக்தர்கள் வீட்டிலிருந்து கோயிலுக்கு முளைப்பாரியை கொண்டு சென்றனர். அங்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக முளைப்பாரியை பெண்கள் ஊர்வலமாக கொண்டு சென்று நாட்டா முத்தி அய்யனார் ஊருணியில் கரைத்தனர்.