உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம்

அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; ஸ்ரீ ராமானுஜர் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார். இதையொட்டி கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ ராமானுஜரின் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. காலை ஆறு முப்பது மணி அளவில் விக்னேஸ்வர ஆராதனை, புண்யா வாசனம், சிறப்பு ஹோமம், திருமஞ்சனம் ஆகியன நடைபெற்றன. இதையடுத்து பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. காலை ஏழு முப்பது மணியளவில் ஸ்ரீ ராமானுஜருக்கு அலங்கார பூஜை அதை தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது உற்சவர் கோவில் பிரகாரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.நிறைவாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராமானுஜரை தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !