உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ஆண்டிபட்டி; ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவின் கொடியேற்று விழா நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. இக்கோயில் சித்திரைத் திருவிழா மே 2ல் துவங்கி 13ல் முடிகிறது. மே 11, 12 தேதிகளில் தேரோட்டம் நடைபெறும். நேற்று நடந்த கொடியேற்று விழாவில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.,மகாராஜன், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் லோகிராஜன், கோயில் செயல் அலுவலர் சுந்தரி, ஆய்வாளர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு சுவாமிக்கு 9 வகை அபிஷேகங்கள், யாகசாலை பூஜைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் வாஷாந்தி புண்ணியா வாஜனம் செய்தனர். ஆஞ்சநேயர் படம் பொறித்த கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கோயில் அர்ச்சகர் முரளி கொடி ஏற்றினார். பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !