/
கோயில்கள் செய்திகள் / சக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில் திருவிழா; ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அம்மன்
சக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில் திருவிழா; ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அம்மன்
ADDED :192 days ago
கோவை; காட்டூர் அனுப்பர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில் 46ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 21ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு நிகழ்வாக கோவில் வளாகத்தில் பூச்சாட்டுகள் அக்னி கம்பம் நடுதல் ஆகிய நடைபெற்றது. இதை தொடர்ந்து நான்காம் நாளான இன்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு அம்மனை நினைத்து வழிபட்டனர். மூலவர் அம்மன் ரூ 4 லட்சம் மதிப்பிலான பணம், மற்றும் நகை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.