உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

விழுப்புரம்; விழுப்புரம் கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவம் நேற்று தொடங்கியது. விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில், 10 நாள் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 7.30 மணிக்கு, கோயிலின் கிழக்கு பகுதியில் உள்ள கொடி மரத்தில் ரிஷப கொடி ஏற்றி, மூலவர் கைலாசநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, பஞ்சமூர்த்தி உற்சவமூர்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனையுடன், மலர் அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் கொடி மரத்திற்கு அபிஷேகம் செய்து, சுவாமிக்கு தீபாராதனை காண்பித்து, ரிஷப கோடி ஏற்றப்பட்டது. வரும் 18ம் தேதி வரை தினசரி உற்சவமும், வரும் 11ம் தேதி தேர் திருவிழாவும் நடக்கிறது. கொடியேற்ற உற்சவத்தில், ஏராளாமான பக்தகர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !