தந்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :268 days ago
குன்னுார்; குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. குன்னுார் தந்தி மாரியம்மன் சித்திரை கோவில் தேர் திருவிழா பல்வேறு உபயதாரர்கள் சார்பில் தினமும் நடந்து வருகிறது. இந்நிலையில், தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்பில் முளைப்பாரி ஊர்வலத்துடன், அம்மன் பவனி நடந்தது. வி.பி., தெரு சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க, துவங்கிய ஊர்வலத்தில், பலரும் நடனமாடி வந்தனர். காளி மற்றும் மதுரை வீரன் வேடமடைந்தவர்களின் நடனம் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்னிசை நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.