உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோணாங்குப்பம் அய்யனார் கோவிலில் மழை வேண்டி வழிபாடு

கோணாங்குப்பம் அய்யனார் கோவிலில் மழை வேண்டி வழிபாடு

விருத்தாசலம்: கோணாங்குப்பம் அய்யனார் கோவிலில் பருவமழை வேண்டி, கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பம் முகையூர் அய்யனார் கோவிலில், கடந்த 2023ம் ஆண்டில் கும்பாபிேஷகம் நடந்தது. இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு வருஷாபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. இதையொட்டி, விநாயகர் கோவிலில் இருந்து கிராம மக்கள் பொங்கல் பானையுடன் ஊர்வலமாக சென்று, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படையலிட்டனர். அப்போது, பருவமழை தொடர்ந்து பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !