உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொண்டத்துக் காளியம்மனுக்கு சித்திரை மாத சிறப்பு வழிபாடு

கொண்டத்துக் காளியம்மனுக்கு சித்திரை மாத சிறப்பு வழிபாடு

திருப்பூர்; பெருமாநல்லுார் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நேற்று சித்திரைமாத வழிபாடு விமரிசையாக நடந்தது. குண்டம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கொண்டத்துக்காளியம்மன் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. வாசனை திரவியங்கள், முந்திரி, பாதாம்,பிஸ்தா, பேரிச்சம்பழம், நெய், தேன், பால் அபிேஷகம் நடந்தது. பன்னீர் அபிேஷகத்தை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !