விளாச்சேரி யோக தட்சிணாமூர்த்தி கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :124 days ago
திருநகர்; மதுரை விளாச்சேரி யோக தட்சிணாமூர்த்தி கோயிலில் விளாச்சேரி சிதம்பர ஐயர் குடும்பத்தினர் சார்பில் 2023ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்த நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று வருடாபிஷேகம் நடந்தது. மூலவர் முன்பு யாகம் வளர்த்து, பூஜை முடிந்து, புனித நீரால் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரமாகி தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.