பால்குடி கருப்பசாமி கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
                              ADDED :179 days ago 
                            
                          
                          
கொட்டாம்பட்டி; பால்குடி கருப்பசாமி கோயிலில் சித்திரை மாத புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு இன்று கச்சிராயன்பட்டி குதிரை பொட்டலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு பக்தர்கள் புரவி மற்றும் சுவாமி சிலைகளை கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை (மே 6) கோயிலில் உள்ள புரவிகளை குதிரை பொட்டலுக்கு கொண்டு செல்வதோடு திருவிழா நிறைவு பெறும். இவ்விழாவில் பால்குடி, கச்சிராயன்பட்டி பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.