உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்துார் திருநாகேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

குன்றத்துார் திருநாகேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

குன்றத்துார்; குன்றத்துாரில் பழமை வாய்ந்த திருநாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரால் கட்டப்பட்ட இக்கோவில், நவகிரக தலங்களில் ராகு பரிகார தலமாக விளங்குகிறது. இங்கு, சித்திரை மாதம் பிரம்மோற்ச விழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து, பூத வாகனம், நாக வாகனம், யானை வாகனம் என, தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா, இன்று காலை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேரை இழுத்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !