/
கோயில்கள் செய்திகள் / சுவாமிமலை முருகன் கோவிலில் கையில் தீபம் ஏற்றி "வஜ்ரவேல் நாட்டியம் ஆடிய கலைஞர்கள்
சுவாமிமலை முருகன் கோவிலில் கையில் தீபம் ஏற்றி "வஜ்ரவேல் நாட்டியம் ஆடிய கலைஞர்கள்
ADDED :187 days ago
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் வீடான சுவாமிநாதசுவாமி கோவிலில் நேற்று இரவு சித்தரை பெருவிழாவை முன்னிட்டு, ஸ்வாமிநாத சுவாமிக்கு ஆரோஹரா!" என்ற தலைப்பில், "வஜ்ரவேல் நாட்டியம்" என்ற பாரம்பரிய கலையான பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில், முருகனின் வேலான வஜ்ரவேல் வடிவத்தில், தமிழகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 108 பரதகலைஞர்கள் பங்கேற்று கையில் தீபம் ஏந்தி நடனமாடினர். இதனை ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, ரசித்தனர். இந்த நடன நிகழ்ச்சியை ஏ.ஜே.எம்.ஏ., கலைப்பயண வழிகாட்டுதல் சங்கம் ஏற்பாடு செய்து இருந்தது. இவ்விழாவில் சிறப்பு விருத்தினராக கலந்துக்கொண்ட, அறநிலையத்துறை துணை கமிஷனர் உமாதேவி, கலந்துக்கொண்டு, நடனமாடிய கலைஞர்களுக்கு சான்றிதழ்களும், கேடயமும் வழங்கினார்கள்.