பெருமாநல்லூர் உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற அருள்மிகு கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் சித்ரா பவுர்ணமி தேர் திருவிழா கடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியையொட்டி, நேற்று முன்தினம் 11 ம் தேதி இரவு உத்தம லிங்கேஸ்வர் கோவர்த்தனாம்பிகை திருமண வைபவம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. நேற்று 12 ம் தேதி மாலை திருத்தேர் வடம் பிடித்தல், நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை படம் பிடித்து இழுத்தனர். முன்னாடி சிறிய தேரில் விநாயகரும், அதனை தொடர்ந்து பின்னால் பெரிய தேரில் உத்தமலிங்கேஸ்வரர் கோவர்த்தனாம்பிகையும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தேர் ஈஸ்வரன் கோவில் திடலில் இருந்து, தேர் வீதி நான்கு வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேர் திடலை அடைந்தது. இன்று 13 ம் தேதி இரவு 8:00 மணிக்கு பதிவேட்டை, குதிரை வாகன நிகழ்ச்சி, நாளை 14 ம் தேதி காலை 9:00 மணிக்கு நடராஜர் அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சபரீஷ்குமார், செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன், ஆகியோர் செய்து வருகின்றனர்.