திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம் நிறைவு
ADDED :205 days ago
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் புஷ்ப பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி பிரம்மோத்ஸவம் நிறைவடைந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 12 நாட்கள் பிரமோத்ஸவம் நடைபெறும். மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை பல்லக்கிலும், இரவு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. ஆறாம் திருநாளில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும், பெருமாள் அவதார நட்சத்திரத்தில் பத்தாம் திருநாளான மே10 ல் சித்திரைத் தேரோட்டம் நடந்தது.பதினொராம் திருநாளில் காலையில் பிரணகலயமும், மாலையில் புஷ்பயாகமும் நடந்தது. 12ம் திருநாளில் புஷ்ப பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி தேரோடும் வீதியில் வலம் வந்தார். வழியெங்கும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளி பிரமோத்ஸவம் நிறைவடைந்தது.